தயிர் உட்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் தயிர் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் இருவேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 6 பேரும் இன்று காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6, 7, மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் வயிற்று வலி, வாந்திபேதி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இதேவேளை தாய் மற்றும் இரு சிறார்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் பாலை தயிராக்கி உட்கொண்டதையடுத்து வயிற்றுவலி, வாந்திபேதி ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த அறுவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
