நாமல் ராஜபக்சவின் புதிய ராஜாங்க அமைச்சு! ஒதுக்கப்பட்டுள்ள ஆறு அரச நிறுவனங்கள்
அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் உள்ள டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சுக்கான நிறுவனங்கள் சம்பந்தமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கை தர கட்டுப்பாட்டு நிறுவனம் உட்பட 6அரச நிறுவனங்கள் இந்த ராஜாங்க அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம், தேசிய விஞ்ஞான தொழிற்நுட்ப ஆணைக்குழு , அனைத்து தகவல் தொழிநுட்ப பூங்காக்கள், ஸ்ரீலங்கா இன்ஸ்டியூட் ஒப் நெனோ டெக்னோலேஜ் பிரைவட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் நாமல் ராஜபக்சவின், புதிய ராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனிடையே கொழும்பு துறைமுக நகர ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri