வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை

Jaffna Kidney Disease Northern Province of Sri Lanka
By Rakesh Aug 21, 2026 03:06 AM GMT
Report

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும்.

அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நோயாளியின் சிகிச்சை 

இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை | Six Blood Purification Machines Donated Hospitals

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(20.08.2026) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன், அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால மனிதநேயப் பணி

சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச் சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை | Six Blood Purification Machines Donated Hospitals

குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச் சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். 

செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் நீண்டகால மனிதநேயப் பணியையும் ஆளுநர் பாராட்டினார். தாம் 2007ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்புத் திட்டமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் செந்தில்குமரனுடன் இணைந்து பங்கேற்றிருந்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலத்திலிருந்தே அவர் சேவை மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கான இவ்வாறான பங்களிப்புகள் வடக்கு மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படாத மனிதநேயத் தொடர்பின் வெளிப்பாடாக அமைகின்றன என ஆளுநர் தெரிவித்தார்.

செந்தில்குமரன் கனடாவில் வாழ்ந்து வருவதுடன், அங்கு மேற்கொள்ளும் தொழில் மற்றும் சமூகப் பங்களிப்புகளுடன் இணைந்து தாயக மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை | Six Blood Purification Machines Donated Hospitals

முன்னர் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தரப்பினருக்கான வரித்தீர்வை நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான மனிதநேய நன்கொடைகளை ஊக்குவித்து வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்த மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இன்று வழங்கப்படுவது ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்றாலும், அதன் உண்மையான பெறுமதி அதைவிடப் பெரியது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை வாய்ப்பையும், குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வடக்கு மாகாண மக்களுக்கு மனிதநேயப் பங்காளித்துவத்தின் மீது புதிய நம்பிக்கையையும் வழங்குகின்றது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

கனடா மக்களின் மனிதநேயப் பங்களிப்புக்கும் செந்தில்குமரனின் அர்ப்பணிப்புக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அணிகளின் உறுப்பினர்கள், செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இருதயச் சத்திரசிகிச்சையால் பயன்பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஐவர் பலி - மூவர் படுகாயம்

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஐவர் பலி - மூவர் படுகாயம்

கைது செய்யப்படப்போகும் மிக முக்கிய அரசியல் புள்ளிகள்! அரசாங்கத்தை திசை திருப்பும் களத்தில் ரணில்..

கைது செய்யப்படப்போகும் மிக முக்கிய அரசியல் புள்ளிகள்! அரசாங்கத்தை திசை திருப்பும் களத்தில் ரணில்..

மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US