தமிழரசு கட்சியின் தீர்மானம் தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானத்தின் அறிவிப்பு

Ilankai Tamil Arasu Kachchi Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Diasa Sep 02, 2024 11:25 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (01.09.2024) நடந்த கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார்.

நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்தனர்.

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

சஜித்திற்கான ஆதரவு

இதேபோல, பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்தார். என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர்.

தமிழரசு கட்சியின் தீர்மானம் தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானத்தின் அறிவிப்பு | Sivangnanam On Tamil Arasu Katchi Decision

ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.

அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித்திற்கான ஆதரவு நிலைப்பாடாக எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமை தாங்கினார்.

பிரச்சாரங்கள் 

உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமை தாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.

தமிழரசு கட்சியின் தீர்மானம் தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானத்தின் அறிவிப்பு | Sivangnanam On Tamil Arasu Katchi Decision

சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன் எனவும் சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். 

தமிழரசு கட்சியின் முடிவு தொடர்பில் ஆராயப்படும்: சஜித் தொடர்பில் பதிலளிக்க மறுத்த மாவை

தமிழரசு கட்சியின் முடிவு தொடர்பில் ஆராயப்படும்: சஜித் தொடர்பில் பதிலளிக்க மறுத்த மாவை

எங்களை அழிக்க எமது தலைவர்களே போதும்: தமிழரசு கட்சி மீது விமர்சனம்

எங்களை அழிக்க எமது தலைவர்களே போதும்: தமிழரசு கட்சி மீது விமர்சனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US