சுவிட்சர்லாந்தில் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனுக்கு அஞ்சலி

Switzerland
By Dhushi Nov 22, 2026 11:15 PM GMT
Report

கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் ஆகியோருக்கான நினைவு வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று (22.11.2026) சுவிட்சர்லாந்தின் லுற்சேர்ன் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரு ஆளுமைகளினதும் சமூகப் பங்களிப்புகள் மற்றும் பணிகள் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உணர்வுபூர்வ அஞ்சலி நிகழ்வு

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் இணுவையூர் மயூரனின் தொகுப்பில் நிகழ்வு ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வாக, சிவாஜிலிங்கத்திற்கான நினைவுச் சுடரினைத் தற்காப்புக் கலை ஆசிரியர் விபுலானந்தன் கௌரிதாசன் ஏற்றி வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனுக்கு அஞ்சலி | Sivajilingam Pays Tribute In Switzerland

தொடர்ந்து, மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனுக்கான நினைவுச் சுடரினை இராமநாதன் பவான் ஏற்றி வைத்துள்ளார்.

மலர் வணக்க நிகழ்வினை சுவிட்சர்லாந்தின் செங்காளன் நகர நாடாளுமன்றத் தலைவர் துரைராஜா ஜெயக்குமார் ஆரம்பித்து வைத்ததுடன், நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது, சிவாஜிலிங்கம் தொடர்பான நினைவுரையைச் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் அசோக் ஆற்றியுள்ளார்.

ஆறுமுகராசா சபேஸ்வரனின் நினைவுகள் பகிர்வு

மேலும், சிவாஜிலிங்கத்தின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திரன், அவருடனான தனது அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனுக்கு அஞ்சலி | Sivajilingam Pays Tribute In Switzerland

அத்துடன், லுற்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் லுற்சேர்ன் ஆன்மீகப் பணியகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஏனையோரும் நினைவுரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் தொடர்பான நினைவுரையைச் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் ஜெராட் ஆற்றியுள்ளார்.

இரு ஆளுமைகளின் சமூகப் பங்களிப்புகளையும் பணிகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உணர்வுபூர்வமான நினைவுப் பகிர்வாக அமைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனுக்கு அஞ்சலி | Sivajilingam Pays Tribute In Switzerland

சுவிட்சர்லாந்தில் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனுக்கு அஞ்சலி | Sivajilingam Pays Tribute In Switzerland



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US