அரசியல் தேவைகளுக்காகவே போராளிகள்! சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு
அனைவரது அரசியல் இருப்புக்களுக்கும் முன்னாள் போராளிகளும் மாவீரர்களும் தேவையாக உள்ளனர் ஆனால் அவர்களது தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதில்லை என புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று(01.03.2026) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிராயுதபாணிகளாக நின்று தான் இந்த கட்சியை மக்களிடையே கொண்டு செல்கின்றோம். அந்த வகையில், நிறைவாகும் வரை மறைவாக இருந்து எங்களது பணிகளை செய்திருக்கின்றோம். இந்த கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக நாங்கள் ஆலோசித்து, நான்கு வருடங்களாக பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையிலே இந்த கட்சி நிறைவாகும் வரை மறைவாக இருந்தும் இருப்போம் என்று எங்களுடைய எண்ணத்தை அடிப்படையாக கொண்டு நாங்கள் ஒரு நம்பிக்கையுடன் இன்று வெளி வந்திருக்கின்றோம் எல்லோரும் கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள்.

பத்தோடு பதினொன்றாக இதுவும் சென்று விடுமோ? என்ற எண்ணமும் பலரிடம் இருக்கலாம் நிராயுதபாணிகளாக நின்று தான் இந்த கட்சியை மக்களிடம் கொண்டு செல்கின்றோம்.
ஒரு காலத்தில் நிராயுதபாணிகளாக நின்ற செல்வநாயகம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போது மக்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கியவர்கள், அகிம்சை எப்போதும் எங்கும் வெல்லும் என்பதற்கு தழிழீழ தேசிய தலைவர் கூட முக்கியத்துவம் கொடுத்தவர் மதிப்பு கொடுத்தவர் செல்வநாயகம் அவர்களை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டவர் நாங்களும் இப்போது அகிம்சை என்ற பகுதியில் தான் நிற்கின்றோம் நாங்களும் அகிம்சை ரீதியாக இந்த மண்ணிலே விலை போகாத வகையிலே தொடர்ந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது.
இங்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னாள் போராளிகள் மாவீரர்கள் தேவையாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய நலன்களையோ அல்லது அந்த குடும்பங்களின் பாதிப்புகளையோ யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு