சிறிதரனை கடுமையாக சாடிய தயாசிறி எம்.பி
அரசியலமைப்பு சபையில் சிவஞானம் சிறிதரன் எட்டு தடவைகள் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டுள்ளார் என தயாசிறி ஜயசேக்கர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22.01.2026) நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசுக்கு சார்பாக செயற்பட்ட சிறிதரன்
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியே அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அரசியலமைப்பு சபை நிராகரித்த நியமனங்களுக்கு சார்பாக அதாவது அரசுக்கு சார்பாக வாக்களித்துள்ளார். இது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தலைவர் நியமனத்திற்கும் அவர் வாக்களித்தார். ஆனால் விதிமுறை கோவையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொறுப்பிருந்தால் அறிவிக்க வேண்டும்.

ஆனால் அவர் அது தொடர்பில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அவர் பிரதிநிதித்துப்படுத்தும் கட்சியும் அவரை அரசியலமைப்பு சபையில் இருந்து விலகுமாறு குறிப்பிட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளால் இவர் வடக்கு மக்களின் உரிமைகளையும் காட்டிக் கொடுத்துள்ளார்.அவர் இந்த சபையில் இருப்பதற்கு அருகதையற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam