டில்வின் சில்வாவை சந்தித்த இந்திய சிரேஷ்ட கலைஞர்கள்..
இலங்கை வந்திருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற, சிரேஷ்ட இந்தி பாடகி திருமதி அனுராதா பவுட்வால் (Anuradha Paudwal) நேற்று (21.01.2026) ஜே.வி.பியின் பொதுச் செயலாளரை சந்தித்தார்.
அனுராதா பவுட்வால் உடன் வந்திருக்கும் கலைஞர்கள் குழு பெலவத்த மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி
இச்சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டார்.
மேலும் இந்த குழுவில் (General Commissioner of India) முதல் செயலாளர் திருமதி ரோஷ்னி தாம்சன், விவேகானந்தா கலாசார மையத்தின் இயக்குனர், பேராசிரியர் அங்குரன் தத்தா, "டைம்லெஸ் பாலிவுட் மெலடிஸ்" “Timeless Bollywood Melodies” இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் திருமதி ஃபாரஸ்ட் கௌசல்யா விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அனுராதா பவுட்வாலின் இசை நிகழ்ச்சி நானை (23.01.2026) ஆம் திகதி நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாசார நட்புறவு, இரு நாடுகளின் கலாசார பரிமாற்றத்தை வலுப்படுத்தவும் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam