இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையிலுள்ள வங்கிகள் இனிவரும் காலங்களில் வெறும் நிதி இலாபத்தை மாத்திரம் நோக்கமாக கொள்ளாது, கற்றல் மூலம் வருவாய் என்ற புதிய அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தேசிய வங்கி மற்றும் நிதி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி வருவாய் கணக்கீடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பாரம்பரிய நிதி வருவாய் கணக்கீடுகள் இனி போதுமானதாக இருக்காது.
தொழிநுட்ப மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு தரவுத்திறன் மற்றும் புத்தாக்க சோதனைகளுக்காக வங்கிகள் மூலதனத்தை ஒதுக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் மாற்றம்
அத்துடன் டிஜிட்டல் மாற்றத்தை வெறும் தகவல் தொழிநுட்ப நடவடிக்கையாகப் பார்க்காது, வங்கியின் அடிப்படை நிதி மூலோபாயமாக கருத வேண்டும்.
காலநிலை அபாயங்கள் என்பவை நிதி அபாயங்களே. இவை வங்கிகளின் சொத்து மதிப்பு மற்றும் கடன் செயல்திறனை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan