தயாசிறி உண்மையான பௌத்தனாக இருந்தால் மோசடியை நிரூபிக்க வேண்டும் : சிறீதரன் அவையில் ஆவேசம்...
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர ஒரு சரியான சிங்கள பௌத்தனாக இருந்தால் நான் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என சிவஞானம் சிறீதரம் எம்.பி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சூரிய மின்சக்தி திட்டத்திற்காக 70 மில்லியன் ரூபாவை மோசடியாக சிறீதரனின் வங்கி கணக்கிலும் மகன் சாரங்கன் கணக்கிலும் வைப்பிலிப்பட்டுள்ளதாக நேற்று (22.01.2026) நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (23.01.2026)சிறீதரம் எம்.பி உரையாற்றும் பொதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
விடுக்கப்பட்டிருக்கும் சவால்
ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசியது மிகப் பிழையான செயற்பாடாகும்.அவர் அவ்வாறு சொல்லி இருந்தால், எந்த வங்கியில் எவ்வளவு பணம் எந்த திகதியில் வைப்பிலிடப்பட்டது என்பதை நீதியான ஒரு அரசியல் தலைவனாக இருந்தால் அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவர் உண்மையிலே ஆடையுடன் தான் வந்து அவையில் பேசுகிறார் என்றால் அவர் இதை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்து 16 வருடங்கள் கடந்தருக்கிறது.இது வரை காலத்தில் நான் நீதி, தர்மத்தின் படியே நடந்திருக்கிறேன்.
அரசியலமைப்பு பேரவையில் ஒரு சுயாதீன எம்.பியாக நீதியாகவும் சுயாதீனமாகவும் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri