கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமை! கடுமையாக அமுலாகும் சட்டம்
கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை கட்டுப்படுத்த பொது மக்களின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு நேற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையால் நாங்கள் தயங்க போவதில்லை. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர், சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் காரணமாக வீடுகளில் வைபவங்களை நடத்த அனுமதி கோரி, சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலங்களுக்கு வர வேண்டாம்.
இலங்கையில் தற்போது வரையறைக்கு உட்பட்டே திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த முடியும்.
இந்த நிலையில் இன்றைய தினம் முதல் நாங்கள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
