மிலிந்த மொரகொடவால் இந்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட பரிசு
இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங்கிற்கும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இராமாயணத்தின் படி சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று நம்பப்படும் இலங்கையின் சீதாஎலியாவில் கோயிலுக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து பெறப்பட்ட கல்லொன்றை உயர்ஸ்தானிகர் மொரகொட இந்திய அமைச்சர் சிங்கிற்கு வழங்கியுள்ளார்.
இந்தியாவின் ஒத்துழைப்பு
இந்நிலையில் இந்தியாவுடனான மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் இந்த சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



