கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு குறிவைக்கும் சஜித் பிரேமதாசவின் சகோதரி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, அவரது தந்தை ஸ்தாபித்த சுச்சரித்தவுக்கு வந்து நாற்காலிகளை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார்.
பொது மக்களுக்கு நாற்காலிகள் விநியோகிக்கப்பட்ட இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டுள்ளது.
அத்துடன் துலாஞ்சலி பிரேமதாச கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துலாஞ்சலி பிரேமதாச கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள மக்களுக்கு நாற்காலிகளை வழங்கி வருவதுடன், இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆதரவு கிடைத்துள்ளது.
அடுத்தாண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர மேயராக ரோஷி சேனாநாயக்க தற்போது பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் துலாஞ்சலி பிரேமதாச போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.




