சினோவெக் தடுப்பூசி கொள்வனவு செய்யும் உத்தேசமில்லை – அரசாங்கம்
சீன தயாரிப்பான சினோவெக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் திட்டங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் சினோவெக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய உள்ளதாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினோவெக் தடுப்பூசிகளை எவ்வளவு கொடுத்து வாங்குவது எவ்வளவு மாத்திரைகளை தேவை என்பது போன்ற எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர தேவைகளுக்கு சினோவெக் தடுப்பூசி பயன்படுத்த முடியும் என அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் அதனை கொள்வனவு செய்ய வேண்டுமென அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய வலயத்தில் சீனா கொண்டுள்ள கரிசனையை காயப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் சினோவெக் தடுப்பூசி குறித்து இலங்கையில் போலிச் செய்திகளை பரப்பி வருவதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
