எரிபொருட்களின் விற்பனை விலையை வெளியிட்ட சினோபெக்
சீனா நிறுவனமான சினோபெக் லங்கா நிறுவனம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான சில்லறை விற்பனை விலையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் ஒக்டெய்ன் 92 லீற்றர் ஒன்றின் விலை ரூபா 358 ஆகவும், பெற்றோல் ஒக்டெய்ன் 95 லீற்றர் ஒன்றின் விலை ரூபா414 ஆகவும் விலையிடப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை
மேலும், லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் 338 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் 356 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் சில்லறை விலை 231 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது.
இந்த விலையானது நாட்டில் உள்ள அனைத்து சினோபெக் உரிமையாளர் நிரப்பு நிலையங்களுக்கும் பொருந்தும் என்று சினோபெக் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
