சிங்கள சட்டமே இந்தச் சீரழிவுக்கு காரணம்: நாடாளுமன்றில் பலரும் சுட்டிக்காட்டு (Video)
சட்டக் கல்லூரிக்கு நுழையும் போட்டிப் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக இன்னொரு தரப்பினரும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் ஆங்கில மொழியில் நடத்த வேண்டும் என்பதே சட்டம் கற்கை பற்றிய குழுவின் தீர்மானம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் இது தொடர்பாக மீண்டும் சட்டமா அதிபர் மற்றும் சட்டம் கற்கை பற்றிய குழு ஆகியோருடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்திற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று (19.10.2022) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, சட்ட கல்லூரி நுழைவு பரீட்சையை ஆங்கிலத்தில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், கிராமபுறங்களில் கல்வி கற்று வரும் மாணவர்கள் முறையாக ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் பரீட்சைக்கு முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகையின் கண்ணோட்டம்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
