பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெணிகே மகே ஹித்தே பாடல்! - அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்
மெணிகே மகே ஹித்தே என்ற அட்டை பாடல் 122 மில்லியன் பார்வைகளைக் கவர்ந்தபோதும், இலங்கையின் அதிகாரிகள், அந்த சாதனையை அங்கீகரிக்கத் தவறியது குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யோகானி மற்றும் சதீஷனின் இந்த அட்டை பாடல் உலகளாவிய ரீதியில் பாராட்டைப் பெற்றுள்ளது. எனினும் இலங்கையின் அதிகாரிகள் அதனை அங்கீகரிக்க தவறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) பதில் வழங்கியுள்ளார்.
கோவிட் சூழ்நிலையின் விளைவாக யோஹானியின் சாதனைக்காக அரசாங்கம் எந்த பொது நிகழ்ச்சியையும் நடத்த முடியாது என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அவரது சாதனையை அரசாங்கம் அங்கீகரிக்கும் அதே வேளையில், கோவிட் நிலைமை மேலும் மேம்பட்டவுடன் முறையான பாராட்டு நிகழ்வு நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பெரிய சாதனையாகும். இந்தநிலையில் யோஹானி போன்ற ஏனைய இளைஞர்களையும் அரசாங்கம் ஊக்குவிக்க முடியும் என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri