புத்தாண்டு கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாத கிளிநொச்சி மக்கள்!
கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதிலோ அல்லது புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதிலோ மக்கள் ஆர்வம் காட்டவில்லை என நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள தமிழ்ப் புத்தாண்டு மலர உள்ள நிலையில், குறித்த சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறன.
குறிப்பாகப் பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை என பல்வேறு காரணங்களால் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் கடந்த காலங்கள் போல் புத்தாண்டு வியாபாரம் களைகட்டவில்லை என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பு
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு
முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக அதிகரித்த வரிசுமை மற்றும் மின்சார
கட்டண அதிகரிப்பு பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றின் காரணமாகக் கூடுதலான
முதலீடுகளைச் செய்து ஆடைகளைக் கொள்வனவு செய்தாலும் அவற்றை விற்பனை செய்வது மிகக்
கடினமாகவே இருப்பதாகவும் கடந்த காலங்களைப் போல் எதிர்பார்த்த எந்த வியாபாரமும்
இம்முறை நடைபெறவில்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri