வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்
ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் பிரபல பாடகர் ஒருவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் தகவல்களின்படி, குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக, சந்தேகநபரான பாடகர் மதுபோதையில் சென்றுள்ளார்.
இதன்போது, அவர் வைத்தியசாலை ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், ஒழுங்கீனமாகச் செயற்பட்டதாக கூறப்படுகின்றது.
அதிகாரியுடன் முரண்பாடு
அதன் காரணமாக, அவரை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேற்ற பாதுகாப்பு ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார்.

இதன்போது, ஏற்பட்ட பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்ட வைத்தியசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது சந்தேகநபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு முன்னர் குறித்த சந்தேகநபர் வைத்தியசாலை வைத்தியர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri