மாடி மனைகளை கொண்ட நாட்டில் 30 வருடங்கள் காட்டில் வசித்த மனிதன்! பகிரப்படும் உண்மைக் கதை (photos)
சொகுசு வீடுமனைகளை கொண்ட சிங்கப்பூரில், சுமார் 30 வருடங்களாக காட்டில் வசித்து வந்த ஒருவரின் கதை வெளியாகியுள்ளது.
ஒவ் கோ செங் என்ற 79 வயதான அவரின் கதை தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
உள்ளுார் சந்தையில் அனுமதியின்றி வர்த்தகம் செய்வதை அதிகாரிகள் தடுத்தபோதே அவர் கடந்த 30 வருடங்களாக காட்டில் வசித்து வந்தமை கண்டறியப்பட்டது.
1980ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் புதிய பாரிய அடுக்குமாடிகளை அமைப்பதற்காக செங் வசித்து வந்த இடங்கள் தகர்க்கப்பட்டன.
இதன்போது பலருக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டன.
எனினும் செங்“குக்கு மாத்திரம் தமக்கான வீடு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
அவரின் சகோதருக்கு வீடு ஒன்று அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
இருப்பினும் அதில் சென்று வசிப்பதற்கு ஒவ் கோ செங் விரும்பவில்லை.
இந்தநிலையில் தமது பழைய இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அவர் தங்க ஆரம்பித்தார்.
பின்னர் அதனை நிரந்தரமான தங்குமிடமாக மாற்றி, அருகில் பயிர்ச்செய்கையையும் மேற்கொண்டார்.
எனினும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள இடத்தில் வசித்து வந்த தமது மனைவிக்கும் மகளுக்கும் பணத்தை அனுப்புவதை அவர் கைவிடவில்லை.
அவர்களுக்கு செங் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரிந்திருக்கவில்லை.
அயலவர்கள் கேட்டால், தோட்டத்தில் வசிக்கிறார் என்றே அவர்கள் கூறி வந்துள்ளனர்.
இந்தநிலையில் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவரை பற்றி தேடியறிந்து அரசாங்கத்தின் ஊடாக வீடு ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.
எனினும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய வீட்டைக் காட்டிலும் காட்டில் தங்கியிருந்தைமையே தமக்கு மிகவும் பிடித்திருந்தது என்று ஒவ் கோ செங் குறிப்பிட்டுள்ளார்.
காட்டில் இருந்து வந்த பின்னர் இயற்கையை தாம் தவறிவிட்டு விட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனினும் அங்கு எலிகள் மாத்திரமே தமக்கு எதிரிகளாக இருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதும் அவர் காட்டு வீட்டை மறக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு எழுந்து காட்டில் உள்ள தமது பயிர் நிலங்களுக்கு சென்று வருவதை வழமையாகக் கொண்டுள்ளார்.



