இலங்கையின் செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு
இலங்கையின் செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டம்
செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டறிவதற்காக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டம்' (AI Singapore) உடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
அதற்காக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை முறைமைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
அதற்கமைய இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
