2003இல் விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவில் நடந்த ரகசியப் பிளவு! வரலாற்றின் மறுபக்கம்
2003-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏற்பட்ட முக்கியமான பிளவு பெரியதாக வெளியில் பேசப்படவில்லை.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த ரெஜினால்ட், பொட்டம்மானின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க முடியாது என்று கூறி, தனது கீழ் இருந்த 52 போராளிகளுடன் பிரிந்து சென்றார்.
இது விடுதலைப்புலிகளின் அமைப்பின் கட்டமைப்பைப் பாதித்த ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
கருணா கிழக்கில் தனது சொந்த அதிகாரத்தைச் செலுத்த விரும்பியதாலேயே இந்தப் பிரிவு ஏற்பட்டது. ரெஜினால்ட் தலைமையிலான குழு நேரடியாக கருணாவின் கீழ் இயங்கத் தொடங்கியது.
கருணாவின் பிரிவுக்குப் பிறகு, அவர் கொழும்புக்குத் தப்பிச் சென்றபோது ரெஜினால்ட்டும் அவருடன் சென்றார்.
இருப்பினும், தளபதி சார்ள்ஸ் முன்னரே திட்டமிட்டபடி, ரெஜினால்ட்டுக்கு உதவிய இளைஞர் மூலமாகவே அவரை வன்னிக்குக் கடத்தி வந்தனர்.
வன்னிக்குக் கொண்டுவரப்பட்ட ரெஜினால்ட்டிடம், "துரோகம் எப்படி வலிக்கும் என்று காட்டுவதற்காகவே உன்னை இங்கு கொண்டு வந்தேன்" என்று சார்ள்ஸ் கூறியது, துரோகத்தின் விளைவுகளை உணர்த்தும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாகப் பதிவாகியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மைகள் நிகழ்ச்சி..