நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! தாமதமின்றி செயற்படுங்கள்
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாளாந்தம் பதிவாகும் கோவிட் மரணங்களில் பெரும்பாலானோர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெறாதவர்களாவர். எனவே தடுப்பூசியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அனைவரும் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒமிக்ரோன், டெல்டாவை விட வேகமாகப் பரவக் கூடிய என்ற நிலையில், கடந்த வாரம் தொற்றாளர் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பையும் இனங்காணக் கூடியதாகவுள்ளது.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் இதுவரையில் 15,000 கோவிட் சிகிச்சை படுக்கைகளில் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு 52 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவுள்ளனர்.
இதே நிலைமையைத் தொடர்ந்தும் பேணுவதற்கு தாமதமின்றி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri