யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Switzerland
By Dhushi Oct 05, 2026 12:11 PM GMT
Report

சுவிற்சர்லாந்து மற்றும் யாழ்ப்பாணம் இரண்டிற்கும் இடையிலான தொலை அளவீடுகளை உட்பொருளாக நினைவுகூரும் வகையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான சிறப்பு நிகழ்வுகள் நேற்று (04.10.2026) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 70 ஆண்டுகால சுவிற்சர்லாந்து - இலங்கை நட்புப் பயணம், 25 ஆண்டுகால அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான பங்களிப்பு மற்றும் 20 ஆண்டுகால சுவிஸ் வளர்ச்சி ஒத்துழைப்பின் (SDC) செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், சமூகப் பெரியோர்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் வளர்ச்சி, அமைதி மற்றும் மனித உரிமைகள் துறைகளில் சுவிற்சர்லாந்தின் பங்களிப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படம் திரையிடல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுவிற்சர்லாந்து மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான ஆவணப்படம் கடந்த 3ஆம் திகதி திரையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு | Significant Event In Swiss Sri Lankan Relations

“பயணம்” எனும் தலைப்பில், இத்தனை ஆண்டுகளாக சுவிற்சர்லாந்து தூதரகம் ஆற்றிய பணிகளை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இலங்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டங்களின் பெறுபேறுகளும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, தற்போது பணிகள் ஊடாக ஏற்படுத்தப்பட்ட தனிமனித, சமூக மற்றும் தேசிய ரீதியான மாற்றங்களும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடுகளைச் சுவிற்சர்லாந்து தூதரகம் முன்னின்று ஆற்றியிருந்தாலும், இதில் பலரது பங்களிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்களின் பங்களிப்புகள் இல்லாமல் இந்தப் பணிகளை முன்னெடுத்திருக்க முடியாது.

ஆகவே, இந்தப் பணிகளில் இதுவரை பங்காற்றிய தனிநபர்கள், பொது அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும் உரிய மதிப்பளிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், பொருளாதார வளர்ச்சி, புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் பங்கேற்ற சிறப்புரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு | Significant Event In Swiss Sri Lankan Relations

இந்த வரலாற்றுப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. கடந்தகால சாதனைகளை மீளத் திரும்பிப் பார்ப்பதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் களமாக இந்த நிகழ்வு அமைந்தது. நிகழ்வின்போது மார்த்தின் ஸ்ரூடெர், சுவிற்சர்லாந்தின் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான பணியகமான (DEZA) அமைப்பில், நெருக்கடி மற்றும் மறுசீரமைப்புப் பகுதிகளில் திட்டத் தலைவராகப் பணியாற்றினார்.

அதேபோன்று, சுஷாந்தி கோபாலகிருஷ்ணன், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிற்சர்லாந்துத் தூதரகத்தில் மூத்த தேசிய திட்ட அலுவலராக (Senior National Programme Officer) பணியாற்றி வருகிறார்.

இவர் இந்த நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியிருந்தார். “70 முகங்கள்” கண்காட்சியும் சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பும் முன்னர் கொழும்பில் நடத்தப்பட்டு, தற்போது யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்படும் “70 ஆண்டுகள் 70 முகங்கள்” ஒளிப்படக் கண்காட்சி, இரு நாட்டு உறவின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதில் சமூகம், பண்பாடு, கல்வி, மாந்தநேயம் மற்றும் பொதுநலன் சார்ந்த துறைகளில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளின் முகங்களும் அவர்களின் பணிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல தமிழ் முகங்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் தமிழ்ச் சமூகத்தின் சமய, பண்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

சைவநெறிக்கூடத்தின் வரலாறு மற்றும் பணிகள்

1994ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் நிறுவப்பட்ட சைவநெறிக்கூடம், இனம், மொழி, சமயம், பண்பாடு மற்றும் வரலாறு எனும் ஐந்து துறைகளில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை முன்னெடுக்கும் பக்தி மன்றமாகச் செயற்பட்டு வருகின்றது. தற்போது பேர்ன் மாநிலத்தை மையமாகக் கொண்டு, சுவிஸ் வலே (மர்தினி), இங்கிலாந்து (கைவீக்கம்), இலங்கை (யாழ்ப்பாணம் இணுவில், அம்பாறை பளவெளி - வளத்தாப்பிட்டி மற்றும் 12.07.2026 முதல் லிந்துல - நுவரெலியா) ஆகிய இடங்களில் கருவறையில் தமிழ் ஒலிக்கும் திருக்கோவில்களை அறங்காவல் செய்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு | Significant Event In Swiss Sri Lankan Relations

சுவிற்சர்லாந்து அரசு அளித்துள்ள இந்த அங்கீகாரத்தைத் தனிப்பட்ட மதிப்பாக மட்டும் கருதாமல், தமிழ் மொழி, சமூகம், தாயகம் மற்றும் மாந்தர் நலன்களுக்குப் பயனுள்ளதாக மாற்றுவதே சைவநெறிக்கூடத்தின் அணுகுமுறையாகவும் பார்க்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தில் தமிழர்கள் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வேளையில், அங்கு வாழும் சமூகத்தோடு இணைந்து செயலாற்றுவதோடு, தாயக மக்களின் நலன்களுக்காக நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுப்பது புலம்பெயர் சமூகத்தின் பொறுப்பாகும்.

பன்னாட்டு சட்டம் மற்றும் மனித உரிமை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சுவிஸ் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, “புலம்பெயர் தமிழர்கள் 40 ஆண்டுகள்” குழுமத்தின் சார்பில் தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை சைவநெறிக்கூடம் 03.03.2026 அன்று சுவிற்சர்லாந்து மத்திய அரசுத் தலைமைச் செயலகத்தில் கையளித்தது.

யாழ்ப்பாணக் கண்காட்சியின் முக்கியத்துவம்

கொழும்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இக்கண்காட்சி நடைபெறுவது, சுவிஸ் - இலங்கை உறவின் வரலாற்றையும், சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களின் சமூக, சமய, பண்பாட்டுப் பங்களிப்புகளையும் வடபகுதி மக்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது.

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு | Significant Event In Swiss Sri Lankan Relations

இந்தக் கண்காட்சி கடந்தகால நினைவுகளோடு நின்றுவிடாமல், இலங்கையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான எதிர்காலப் பாதையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, சைவநெறிக்கூடம் இந்தக் கண்காட்சிக்குத் தனது வாழ்த்துகளையும், சுவிற்சர்லாந்து தூதரகத்தின் பணிகளுக்கு தனது வலிமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் சைவநெறிக்கூடத்தின் பிரதிநிதிகளாக யாழ். இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத், பேர்ன் - சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூட இளையோர் மன்ற இணைப்பாளர் சட்டவாளர் லாவன்யா சின்னத்துரை, தெய்வநாயகம் ராஜ்குமார், தவக்குமார் டிலக்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US