நெல்லியடியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம்(Photos)
பயங்கரவாத தடைச்சட்டத்தைத் தடை செய்யக்கோரிய யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி - நெல்லியடி பேருந்து நிலையத்தில் இன்று காலை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி
ஜஸ்டின் ஞானப்பிரகாசம், தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ்
மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர்
கைச்சாத்திட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகள் விசாரணை இன்றி கைது
செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும்
மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமெனத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam