சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று பருத்தித்துறையில்...
இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குள் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றையதினம் பருத்தித்துறை நகர பகுதியின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது வருகிறது.
கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பருத்தித்துறை நகர சபையினர் உப தவிசாளர்,நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பூநகரியில் கையெழுத்து போராட்டம்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி தமிழ் கட்சிகள் முன்னெடுத்துள்ள கையொப்பம் பெறும் நடவடிக்கை பூநகரி வாடியடில் இன்று() முன்னெடுக்கப்படுகிறது.
செய்தி - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







