புதிய சட்ட வரைவை எதிர்த்து பருத்தித்துறையில் கையெழுத்து போராட்டம்!
வடக்கு, கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பாதற்கு என கொண்டுவர இருக்கின்ற புதிய சட்ட வரைவும் வேண்டாம் என அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் இன்று(21.02.2026) பருத்தித்துறை நகரில் இடம்பெற்றுள்ளது.
கையெழுத்து போராட்டம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றோரின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொட்டடி கோமகன், தமிழர் கலைமன்ற இயக்குனர் கமலகாந்தன் உட்பட பொது அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்நிதி முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri