மன்னார் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை (Photos)

Mannar Sri Lanka Sri Lanka Fisherman
By Rusath Dec 14, 2023 01:46 PM GMT
Report

புதிய கடற்றொழிலாளர் கொள்கை வரைவுக்கு எதிராக கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று(14.12.2023) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஏற்பாட்டில், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)

பொருளாதார நெருக்கடி

இவ்வாறு சேகரிக்கப்படும் கையெழுத்துகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடற்றொழில் சமூகத்தை பெரிதும் பாதிப்படைய வைத்திருந்தது.

மன்னார் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை (Photos) | Signature Gathering Activity Conducted In Mannar

இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி கடற்றொழிலாளர் சமூகத்திற்கு முடிவு வழங்குமாறு கோரி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் சமூகத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள கடற்றொழில் சட்டம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்க முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Video)

யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Video)

கடற்றொழில் சட்டம்

இவ்வாறு வர்த்தக மயப் படுத்தப்பட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக வரைவை சட்டத்துக்கான எதிர்ப்பினை ஒவ்வொரு இடங்களில் கடற்தொழிலாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கான ஒதுக்கீடுகள் மிக குறைவாக உள்ளது. மேலும் கடற்றொழில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் உணவு இறக்குமதி கொள்கைகள் முன்மொழியப் படுகின்றன. இந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மன்னார் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை (Photos) | Signature Gathering Activity Conducted In Mannar

எனவே வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு தொழில் கப்பல்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதை முற்றும் முழுதாக எதிர்க்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையால் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றி அமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்கள் மூலம் கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவை படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வரும் வட இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US