பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை (Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கையெடுத்து வேட்டையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை
உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன் ஆகியோரும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள்,
மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.






