வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அரசாங்க வீட்டுத் திட்டம் தருவதாக தெரிவித்து தமது அரை நிரந்த வீடுகளையும் பிடுங்கி விட்டு இதுவரையில் வீட்டுத் திட்டத்தையும் வழங்கவில்லை என சுட்டிக்காட்டி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியவிளான் கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீட்டுத் திட்டமானது விரைவாக தமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முற்பகல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரை சந்திக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
எனினும் ஆளுநர் வேறு சந்திப்பொன்றில் இருக்கும் நிலையில் அந்த சந்திப்பு நிறைவடைந்ததும், ஆர்ப்பாட்டகாரர்களின் பிரதிநிதிகள் ஐவரை சந்திப்பதாக தகவல் வழங்கிய போதும் தாம் மொத்த பேரும் ஆளுநரை சந்திக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோரி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களே பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









