விலங்குகளுடன் சமைத்த உணவகம் முற்றுகை! (Photos)
மட்டக்களப்பு நகரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது சமைக்கும் பகுதியில் விலங்குகளுடனும், சுகாதாரத்திற்கு தீங்கை விழைவிக்கும் கழிவு நீரினை திறந்த வெளியினுள் வெளியேற்றிய உணவகம் இன்று பொதுச்சுகாதார பரிசோதகரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது உரிமையாளரிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 30,000 ரூபாய் தண்டப்பணம் வழங்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் (A.C.Riswan) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக பல இடங்கள் முற்றுகையிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
