பணத்திற்கு சூது விளையாடிய இடமொன்று முற்றுகை : இரு வாகனங்களை கைப்பற்றிய பொலிஸார்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்குச் சூது விளையாடிய இடமொன்றினை முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பொலிஸாரினால் இன்று(20) பேராறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சூது விளையாடிய இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேக நபர்கள் பொலிஸாரை கண்டு ஐயாயிரம் பணத்தாளையும் விட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சூது விளையாடிய இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், ஒரு துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சூது விளையாடிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



