நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்: வழக்கு தாக்கல் செய்யவுள்ள சித்தார்த்தன் தரப்பு
நிராகரிக்கப்பட்ட ஒன்பது சபைகளின் வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் சுண்ணாகம் கந்தரோடைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்பு
“எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வசம் உள்ளது.
பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள்.
இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
