அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவும்: முக்கிய அறிவுறுத்தல்
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த காய்ச்சல் மூன்று நாட்களுக்கு நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
"கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே காய்ச்சல் போக்கு அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் காய்ச்சல், இருமலுடன் கூடிய காய்ச்சல், சளி என்பன நோய் அறிகுறிகளாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தப்பரிசோதனை
எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக டெங்கு நோய் குறித்து கவனமாக இருக்குமாறும், டெங்கு கொடிய நோய் என்பதால், 0.1% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
