பாலச்சந்திரன் மற்றும் தன்னிடம் படித்த மாணவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்க கேள்வி
இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பகிரங்கமாக ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பில் அவர் வினவியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நான் அதிபராக கடைமையாற்றிய போது தான் இந்த சண்டைகளும் இடம்பெற்று இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.
அப்போது என்னிடம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோரும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நடேசனின் மகன் ஜனகன் மகேந்திரன், ராஜாவின் மகன் சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, ராஜாவின் மகன் நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, தங்கனின் மகன் துவாரகன் சுதாகரன் எல்லாம் என்னிடம் படித்த மாணவர்கள். ஆறாம் தரம் மற்றும் ஏழாம் தரங்களிலே படித்தார்கள்.
இதேபோல தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனும் ஆறாம் தரத்திலேயே கல்வி பயின்ற நிலையில் இவர்களுடன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam