ஷ்ரேயஸ் தொடர்ந்து கண்காணிப்பில்.. உடல்நிலை குறித்து வெளியான தகவல்
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் உடல் உபாதை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவரின் விலா எழும்பில் முறிவு ஏற்பட்டதுடன் உடலுக்குள் இரத்தக் கசிவு இருப்பதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவு
இந்நிலையில், தற்போது ஸ்ரேயஸ் ஐயரின் உடல்நிலை சீராக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "கடவுளின் ஆசியுடன் ஸ்ரேயஸ் நன்றாக குணமடைந்து வருகிறார். பிசிசிஐ ஷ்ரேயாஸுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றது. நாங்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்” எனவும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |