அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும்! சஜித்
அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்துள்ள அரசாங்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச சமூகத்திடம் எவ்வித உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கவில்லை.
ஆட்சியாளர்களின் தோல்வி நிலைமையினால் நாட்டின் கல்வித்துறை சீர்குலைந்துள்ளது. உரம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.
நாட்டின் அனைத்து மக்களும் நிர்க்கதியான நிலையை அவதானிக்க முடிகின்றது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவும் முடியவில்லை.
ஊடகங்களின் முன்னிலையில் பிரச்சினைகளைக் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாவிட்டால் எம்மை போன்றதொரு குழுவிற்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குக என சஜித் கோரியுள்ளார்.