தேசிய மக்கள் சக்தியில் இணைய மக்கள் பலம் வேண்டும்! ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ள விரும்பும் ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் செல்வாக்கு இருந்தால் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய மக்கள் சக்தி என்பது அரசியல் கட்சி என்பதற்கும் அப்பால் ஒரு பொதுமக்கள் இயக்கமாகும்.
புதிதாய் இணைபவர்கள்
அந்தவகையில், ஏனைய கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எம்முடன் இணைந்து கொள்ள விரும்பினால் அதற்கு அவரது விருப்பம் மட்டும் போதாது.
பொதுமக்கள் விரும்பும் நபராகவும் அவர் இருக்க வேண்டும். எனவே, பொதுமக்களால் நிராகரிக்கப்படுகின்றவர்களை எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளமாட்டோம்.
மேலும், ஊழல், மோசடி, திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவராக செயற்பட்டவர்கள் போன்றோரை தற்போதைய நிலையில் பொதுமக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |