இந்தியாவின் 12 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்குள் பல இடங்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதல்கள் நடத்திய ஒரு நாளுக்குப் பின்னர், இந்தியா அனுப்பிய 12 ஆளில்லாத ட்ரோன்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தமது வான்வெளியில் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறி இந்த ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே பரந்த மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கராச்சி மற்றும் லாகூர்
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் ட்ரோன்கள் என அடையாளம் காணப்பட்ட இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தானின் இரண்டு பெரிய நகரங்களான கராச்சி மற்றும் லாகூர் அருகே உட்பட பல்வேறு இடங்களில் இடைமறிக்கப்பட்டன.
அத்துடன் ட்ரோன்களின் சிதைவுகள்; தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக, பாகிஸ்தானின் இராணுவ பேச்சாளர்; மேஜர் ஜெனரல் அகமது செரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் வான்வெளியில் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.
இந்த ஆக்கிரமிப்புக்காக இந்தியா தொடர்ந்து விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ட்ரோன் தாக்குதல்;கள் காரணமாக, ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், நான்கு படை வீரர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ட்ரோன்களில் ஒன்று லாகூர் அருகே உள்ள இராணுவ இலக்கைத் தர்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
