குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு
துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கரை நாள் வேலை வாரத்தை பின்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புத்தாண்டிலிருந்து புதிய விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக இருக்கும்.
அதேநேரம் வெள்ளிக்கிழமை அரை நாளாக இருக்கும் என்று அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிவித்தலின்படி புதிய அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 முதல் மாலை 3.30 மணி வரையிலுமாக இருக்கும்.
அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணி வரையில் அதிகாரப்பூர்வ வேலை நேரமாக அமையும்.
உலகளாவிய வணிக தொடர்புகளுக்கு அமைய, ஐந்து நாள் வாரத்தை விட குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக அமீரகம் அமைகிறது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri