அரிசி, சீனி மற்றும் சீமெந்துக்கு சந்தையில் தட்டுப்பாடு
சந்தையில் அரிசி, சீனி, சீமெந்து உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே (Ranjith Vithanage) தெரிவித்துள்ளார்.
சில வர்த்தக நிலையங்களில் அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் இருந்த போதிலும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அளவீடு முறையில் பொருட்களை வழங்குவதாக மக்கள் தமது சங்கத்திடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் சீமெந்து தட்டுப்பாடும் நிலவி வருவதுடன் சில வர்த்தகர் சீமெந்து பொதி ஒன்றை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றதாக கூறப்படுகிறது.
இதனால், அதற்கு பதிலாக மாற்று பொருளை கொள்னவு செய்யும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விலைகள் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், காலையில் ஒரு விலைக்கு வாங்கும் பொருளை மாலையில் மற்றுமொரு விலைக்கு வாங்கும் நிலைமை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கூறுவதாகவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.





மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
