இலங்கையில் வாகன டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாட்டில் வாகன டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
எதிர்வரும் மே மாதமளவில் நாட்டில் அமெரிக்க டொலர்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகும் என டயர் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில வர்த்தகர்கள் டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போலியான தட்டுப்பாட்டை தற்போதே உருவாக்கி வருவதாக ஆசிய டயர் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இலங்கைக்குள் சுமார் 31 இலட்சம் டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் பதினெட்டரை இலட்சம் டயர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எஞ்சிய சுமார் 41 வீதமான டயர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் வாகனங்களுக்கான டயர்களை இறக்குமதி செய்து கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
