மன்னார் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை
மன்னார் (Mannar) மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதால் உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதாக மன்/புனித சவேரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி அதிபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (06.05.2024) பாடசாலையின் அதிபர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மனுவில், "நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடம் காரணமாக உயர்கல்வி பிரிவுகளை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
தொடர்ச்சியான பிரச்சினைகள்
மேலும், சில கற்கைகளுக்கு முழுமையான ஆசிரியரின்மை காரணமாக பாடநெறியை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையிலான தளபாடங்கள் இல்லாதால் தற்காலிகமாக பலகைகளை இணைத்தே சில வகுப்பினருக்கு கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அத்துடன், மாணவர்களுக்கான கட்டிட தேவைகள் அதிகமாக காணப்படுவதோடு சில கட்டிடங்கள் அமைச்சுக்களினால் நிதி ஒதுக்கப்பட்டு பகுதி அளவில் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை நிலையில் உள்ளன.
இதன் காரணமாக, பாடசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்கொள்கின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, வடமாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட பிரச்சினை மற்றும் கட்டிட தேவைகள் போன்றன தொடர்ச்சியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் : அ.ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
