கிளிநொச்சியில் இராணுவத்தினரின் நடவடிக்கை : எச்சரித்துள்ள சுகாஷ்!
கிளிநொச்சியில் (Kilinochchi) யுத்த நினைவுச்சின்னம் காணப்படும் இடத்தில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படவுள்ள விளையாட்டு பூங்காவிற்கான கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் (Sukash) தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் ஊடகங்களிடம் கருத்துரைக்கையில்,
"இந்த இடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தினால், மக்களுடன் சேர்ந்து ஒருமித்த அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம்.
மேலும், பூநகரி பொன்னாவெளி பகுதியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. அது மாத்திரமன்றி, உருத்திரபுரம் - உருத்திரபுரீஷ்வரர் ஆலயத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் இந்த கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் - அ. ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
