சில மருந்துகளுக்கு பற்றாக்குறை! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில் , கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக வந்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரல் விட்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை
தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு ரூ. 3,500 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.

இரண்டாவது, அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம்.
சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan