கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கடவுச்சீட்டுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதை தாமதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் வலியுறுத்துகையில்,
"ஒக்டோபர் மாதம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச தரத்திற்கு அமைய புதிய இ - கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய கடவுச்சீட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் இடம்பெறும்.
பல்வேறு காரணங்களால் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை பெறுவதில் தாமதமானதால் புதிய கடவுச்சீட்டு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு கொள்வனவு
ஒரு நாளைக்கு சுமார் 3,000 கடவுச்சீட்டுக்களை வழங்க வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக தற்போது 900 மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்நிலை காரணமாக, மிக அவசர தேவைகளுக்காக தினமும் 100 கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் சில விதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை வழங்கப்பட்ட அனைத்து கடவுச்சீட்டுக்களிலும், 23 சதவீதம் கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, நாட்டின் கடவுச்சீட்டு தரவரிசையை தற்போதைய 193ஆவது இடத்தில் இருந்து மேம்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், புதிய கடவுச்சீட்டு மூலம் 50 இற்கு மேல் தரவரிசைப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
