பாதுகாப்பு தொடர்பாக முக்கிய கலந்துரையாடலை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commision) பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இதில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சமூக ஊடகங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள்
இதன் காரணமாகவே தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் டிக் டொக் (Tik Tok) போன்ற சமூக ஊடகங்களில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் அந்த நிறுவனங்களுடன் நாங்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri