சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: வெளியாகியுள்ள தகவல்
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பற்றாக்குறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருத்துவமனைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மருந்துப் பற்றாக்குறை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சு பலமுறை உறுதியளித்திருந்தது.

நிர்வாக மற்றும் அரசியல் தோல்வி
ஆனால் தற்போது மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது சுகாதாரத் துறையில் ஆழமான நிர்வாக மற்றும் அரசியல் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல அமைச்சரவை முடிவுகள் இருந்த போதிலும், எதுவும் வெற்றி பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri