ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
நாட்டில் தற்போது ஆடைத்தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டை விட்டு பலர் வெளியேற்றம்
இந்த ஆய்வின் படி ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
ஏற்றுமதிக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை செய்து முடிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ள இலங்கை ஏற்றுமதி கைத்தொழில் சபையின் மேலதிக செயலாளர் ருமேஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடைத் தொழிலுக்கான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்றுமதி வருமானம் கடந்த மாதம் 1165. 4 மில்லியன் அமெரிக்கன் டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பானது 4.18 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி, தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளின் முன்னேற்றமே, இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam