புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

Cancer Anura Kumara Dissanayaka Sri Lanka
By Aanadhi Sep 21, 2026 07:34 AM GMT
Report

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவக தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாட்டுக்கான காரணம், அவற்றின் இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளேயாகும்.

கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின்னர் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் G-CSF எனப்படும் தடுப்பூசி மருந்தின் 1 இலட்சத்து 90 ஆயிரம் பாட்டில்கள் அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகள்

சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த மருந்துகள் உரிய லேபிள் வழிகாட்டல்கள் இன்றி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அவற்றை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், புற்றுநோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரு மருந்தை நாட்டிற்கு இறக்குமதி செய்யும்போது தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) அனுமதி, தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை | Shortage Of Essential Vaccine For Cancer Patients

எனினும், சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் உரிய லேபிள்கள் இன்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை, மருந்து ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த இறக்குமதி தொடர்பான முறையான அனுமதிகள், தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் விபரங்களை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தாமல் உண்மைகளை மூடிமறைக்க முற்படுகின்றனர்.

மருந்துப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மற்றும் NMRA தலைவர் தெரிவித்துள்ள போதிலும், மருத்துவமனைகளில் போதுமான அளவு G-CSF தடுப்பூசிகள் கிடைக்காத நிலை தொடர்வதாக தெரிய வந்துள்ளது.

உரிய நடவடிக்கை

இதனால் புற்றுநோயாளிகளுக்கு தேவையான முழுமையான மருந்தளவை வழங்குவதில் வைத்தியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலை சுகாதாரத் துறையில் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துகின்றது. மருந்துக் கொள்முதலில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உரிய லேபிள் உள்ளிட்ட தரத் தகவல்கள் இல்லாத மருந்துகளின் விநியோகம் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை | Shortage Of Essential Vaccine For Cancer Patients

அத்துடன், கடந்த கால ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சில அதிகாரிகள் தற்போதும் முக்கிய பதவிகளில் நீடிப்பதாக விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணையை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகளை உரிய முறையில் கொள்வனவு செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள்

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள்

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுண் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுண் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US